JobVibe.lk - Sri Lanka Job Portal

அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தினால் துறைசார் ஆளுமைகளுக்கான புதுமைப்பெண் விருது புத்தளம் சுபியானிக்கு வழங்கப்பட்டது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் (SCSDO) ஏற்பாடு செய்த துறைசார் ஆளுமைகளுக்கான  விருது விழா வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது 

“முயற்சியே உன் வளர்ச்சி” என்ற சிந்தனையை முன்னிறுத்தும் SCSDO நிறுவனம், அறிவியல் சிந்தனை, சமூக மேம்பாடு, மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்படும் துறைசார் ஆளுமைகளை கௌரவிக்கும் நோக்கில் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் புத்தளத்தைச் சேர்ந்த பாருக் பாத்திமா சுபியானி கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறார் மனித உரிமைக் கல்வி, பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள், சமூக நல்லிணக்கம், சமாதானம், மத்தியஸ்தம், சமூக மேம்பாடு, சிறுபான்மை மக்களின் தலைமைத்துவ மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறமை குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال