எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் குவைத் வைத்தியசாலை வீதி, இஜ்திமா மைதானம் பகுதி ஊடாக, புத்தளம் மன்னார் வீதியை அடையும் வரையான, குன்றும் குழியுமாக காணப்பட்ட பாதை அபிவிருத்திக்காக உள்வாங்கப்பட்டுள்ளது.
மிக நீண்ட காலமாக பொது மக்கள் எதிர் நோக்கிய இந்த கோரிக்கையை புத்தளம் பிரஜா சக்தியின் சமூக மேம்பாட்டு தலைவர் சர்ராஜ் லாபிர், புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மதுக்கு முன்மொழிவு செய்திருந்தார்.
இதனையடுத்து புத்தளம் மாநகர சபை முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத், மாநகர சபை உறுப்பினர்களான சஹ்ரான் தாஜுதீன், சித்தி சலீமா, இப்லால் அமீன், எச்.என்.எம். சிபாக் உள்ளிட்ட மாநகர சபை அதிகாரிகள் குழுவினர் கள விஜயம் மேற் கொண்டு குறித்த பாதையின் சேதங்களை பார்வையிட்டனர்.
மிக விரைவில் கொங்ரீட் பாதையாக உருவாக்கப்பட இருக்கின்ற இப்பாதை பிரதேச மக்களுக்கு பெரும் மகிழ்ச்சிக்குரிய விடயமாக கருதப்படுகிறது.
இப்பகுதி மக்கள் மாநகர சபை முதல்வருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.



