JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்/திகழி அல்-மதீனா ஆரம்ப பாடசாலையின் தரம் 5 புலமைப்பரிசில் சாதனையாளர்களுக்கு கௌரவிப்பு.

எம்.யூ.எம்.சனூன்

​திகழி அல்-மதீனா ஆரம்ப பாடசாலையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பேறுகளைப் பெற்று பாடசாலைக்கும், பெற்றாருக்கும், பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (23) காலை இடம்பெற்றது. 

பாடசாலை நிர்வாகத்தினரால், பாடசாலையின் அதிபர் எம்.முர்ஷித் தலைமையில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் மரைக்கார் கலந்துகொண்டார்.

இதன்போது சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கு சான்றிதழ்களையும், நினைவுச்சின்னங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்தார்.

மாணவர்களை சீரிய முறையில் வழி நடாத்திய அதிபர், ஆசிரியர் பெருந்தகைகள் மற்றும் அனைத்து தியாகங்களையும் செய்து வரும் பெற்றோர் அனைவருக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் மரைக்கார் அங்கு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் என்றும் உறுதுணையாக நிற்பேன் எனவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال