JobVibe.lk - Sri Lanka Job Portal

கடற்படை மரியாதைகளுடன் ரியர் அட்மிரல் தனேஷ் பத்பேரிய கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையில் 33 வருடங்களுக்கும் அதிகமான சேவைக்காலத்தை நிறைவு செய்து ரியர் அட்மிரல் தனேஷ் பத்பேரிய புதன்கிழமை (2026 செப்டம்பர் 16) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையிலான கடற்படை மேலாண்மை வாரியத்தினால், இன்றைய தினம் தனது 55 வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரியர் அட்மிரல் தனேஷ் பத்பேரியவுக்கு கடற்படைத் தலைமையகத்தில் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடற்படை பாரம்பரியத்திற்கு அமைவாக விசேட அணிவகுப்பு மரியாதையுடன் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சக அதிகாரிகளிடம் விடைபெற்று கடற்படை வாகன அணிவகுப்பில் கடற்படைத் தலைமையகத்திலிருந்து புறப்பட்ட போது, சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்கள் ரியர் அட்மிரல் தனேஷ் பத்பேரியவுக்கு கடற்படை பாரம்பரிய முறைப்படி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

1992 ஆம் ஆண்டு ஜெனரல் சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 10வது மாணவர் அதிகாரி ஆட்சேர்ப்பின் மூலம் கடற்படையில் இணைந்த ரியர் அட்மிரல் தனேஷ் பத் பேரிய, தனது 33 வருடங்களுக்கும் அதிகமான சேவைக்காலத்தில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகளின் பொறுப்ப அதிகாரியாகவும் கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். 

மேலும், ரியர் அட்மிரல் தனேஷ் பத்பேரிய; கடற்படை ஒழுக்காற்று அதிகாரி, கடற்படை கட்டளை அதிகாரி (திருகோணமலை வடக்கு), வணிக வெடிபொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கொள்முதல் பிரிவின் பணிப்பாளர், கடற்படை கொள்கை மற்றும் திட்டமிடல் பணிப்பாளர், பாரப்பற்ற நிர்வாக பணிப்பாளர் நாயகம் மற்றும் கடற்படைப் பிரிவு கொடி அதிகாரி போன்ற முக்கிய பதவிகளை வகித்த இலங்கை கடற்படையின் புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியாவார்.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال