JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கை கடற்படையினால்மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், மீனவ சமூகத்தினருக்கு அடிப்படை முதலுதவி மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அறிவூட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி நிகழ்ச்சிகள், 2026 செப்டம்பர் 02 ஆம் திகதி திருகோணமலை பூநச்சிமலையிலும், செப்டம்பர் 15 ஆம் திகதி திருகோணமலை கோட்பே மீன்பிடித் துறைமுகத்தை மையமாகக் கொண்டும் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. 

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், கட்டளை மருத்துவத் திணைக்களத்தினால், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்துடன் இணைந்து இப்பயிற்சி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்நிகழ்ச்சியின் மூலம், மீனவ சமூகத்தினருக்கு அடிப்படை உயிர்காக்கும் நடவடிக்கைகள் மற்றும் முதலுதவி தொடர்பில் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் அறிவூட்டப்பட்டது. மேலும், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், போதைப்பொருள் பாவனையை தடுப்பது மற்றும் சிறந்த மனநலத்தைப் பேணுவது தொடர்பிலும் மீனவ சமூகத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

மேலும், இம்முயற்சியின் மூலம் இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமூகத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال