JobVibe.lk - Sri Lanka Job Portal

மன்னார் முளங்கா பகுதியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை (2026 செப்டம்பர் 15) மன்னார் முழங்காவில் யஹப்பார் கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரண்டு (02) சந்தேகநபர்களும் ஒரு (01) லொறியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் புவனேக நிறுவனத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, முழங்காவில் யஹப்பார் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 370 கிலோகிராமிற்கும் அதிகமான மீன்களை ஏற்றிச் செல்வதற்கு தயாராக இருந்த, மன்னார் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 48 வயதுடைய இரண்டு (02) சந்தேகநபர்களுடன் லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளது

மேலும், இந்நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், லொறி மற்றும் மீன் தொகை என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال