JobVibe.lk - Sri Lanka Job Portal

லிபியாவில் இடம்பெற உள்ள அல்குர்ஆன் மனனப் போட்டிக்கான மாணவர் தெரிவில் கற்பிட்டி ரஹ்மானிய்யா மாணவன் அக்ஸானுக்கு ஆறாமிடம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

லிபியா நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டிக்கான மாணவர் தெரிவிற்காக இடம்பெற்ற போட்டியில் இலங்கை சார்பாக கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின்  எம் எம் முஹம்மது அக்ஸான் என்ற மாணவன் ஆறாவது இடத்தினை பெற்றுள்ளார்.

அகில இலங்கை ஜம்மியத்துல் குர்ராஃ அமைப்பின் ஊடாக நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்ற லிபியா நாட்டின் அல்குர்ஆன் மனனப் போட்டிக்கு மாணவர்களைத் தெரிவு செய்யும் தேர்வு போட்டியில் கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி மாணவன் எம் எம் முஹம்மது அக்ஸான் 93.3 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் ஆறாவது இடத்தினை பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர் எம் ஏ பீ எம் முபாசில் (உஸ்மானி) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال