JobVibe.lk - Sri Lanka Job Portal

SLINEX - 2026' இந்திய-இலங்கை கடற்படைப் பயிற்சியில் பங்கேற்பதற்காக சென்ற சிதுரள கப்பல், இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

SLINEX – 2026 இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்கும் சிதுரள கப்பல் வியாழக்கிழமை (2026 செப்டம்பர் 17) இந்தியாவை சென்றடைந்ததுடன், அக்கப்பல் இந்திய கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கு அமைவாக இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வைத்து வரவேற்கப்பட்டது.

2026 செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் நடைபெறவுள்ள ‘SLINEX – 2026’ பயிற்சியில் பங்கேற்கும் இலங்கை கடற்படைக் கப்பலான சிதுரளவின் கட்டளை அதிகாரி கமாண்டர் சுனந்த அப்புஹாமி மற்றும் இந்திய கடற்படையின் INS  KAVARATTI' கப்பலின் கட்டளை அதிகாரி கொமாண்டர் Suraj Aiyappa ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்புகள் 2026 செப்டம்பர் 18 ஆம் திகதி சிதுரள மற்றும் INS KAWARATTI ஆகிய கப்பல்களில் இடம்பெற்றன.

இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, பரஸ்பர இடைவினைத்திறன் மற்றும் தொழில்முறை அனுபவப் பகிர்வு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்த இருதரப்பு கடற்படைப் பயிற்சியுடன் இணைந்து, இந்திய கடற்படையினால் ஏற்பாடு செய்யப்படும் வேலைத்திட்டங்களிலும் சிதுரள கப்பலின் பணியாளர்கள் பங்கேற்பார்கள்.















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال