JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்முனை மாநகர சபையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் ஆரம்பம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் "வளமான நாடு அழகான வாழ்வு" திட்டத்தின் கீழ்  "மறுமலர்ச்சி நகரம்" எனும் கருப்பொருளில் கல்முனை மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை (14) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இதன்போது தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதமும் அதனைத் தொடர்ந்து உள்ளுராட்சி கீதமும் இசைக்கப்பட்டதுடன் குறித்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான ஆணையாளரின் அறிமுகவுரையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.எஸ். மனாஸிர் அஹ்சன், நிர்வாக உத்தியோகத்தர் சுப்ரமணியம் சுபராஜன், ஆயுர்வேத வைத்திய அதிகாரி ஜுமானா ஹஸீன், கால்நடை வைத்திய அதிகாரி வட்டபொல, வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், உள்ளூராட்சி உதவியாளர் சர்ஜூன் தாரிக் அலி, சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் ஏ.எம். டிலிப் நௌசாத் உட்பட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், வருமானப் பரிசோதகர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து உள்ளூராட்சி வார நிகழ்வுகளின் முதலாம் நாள் செயற்றிட்டமான நடமாடும் சேவைகள் கல்முனை, மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பொது நூலகங்களில் இடம்பெற்று வருகின்றன.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال