JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மாநகர சபையின் உள்ளூராட்சிமன்ற வாரம்.

எம்.யூ.எம்.சனூன் 

தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளூராட்சி மன்ற வார செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு புத்தளம் மாநகர சபையின் ஏற்பாட்டில் புத்தளம் தில்லையடி தாய் சேய் சிகிச்சை நிலையத்தில் திங்களன்று (14) இடம்பெற்றது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு மற்றும் வடமேல் மாகாண சபை ஆகியவற்றின் வழிகாட்டலில் இந்த தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

இத்திட்டத்தின் ஓர் அங்கமாக இலவச ஆயுர்வேத வைத்திய சேவையும் இடம்பெற்றது. 

புத்தளம் மாநகர சபையின் முதல்வர் பொறியியலாளர் ரின்சாட் அஹ்மத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் கலந்து சிறப்பித்தார்.

மாநகர சபை உறுப்பினர்களான சஹ்ரான் தாஜுதீன், அனூஷா ஸ்ரீவர்த்தன, மாநகர சபை ஆணையாளர் எம்.ஜே.எம்.ரலியுதீன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதேச வாசிகள் பலரும் இலவச ஆயுர்வேத வைத்திய முகாமில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்


















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال