JobVibe.lk - Sri Lanka Job Portal

இளையோர் அறியாத தமிழ் இயக்கங்கள். தமிழர்களை ஜிஹாதினர் கொன்றார்களா ?

16 வது தொடர்....... 

தமிழர்களின் அகிம்சைப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு 70 களில் படிப்படியாக ஆயுதப் போராட்டம் எழுச்சி பெற்றது. அதில் இறுதி வரைக்கும் தனி நாட்டுக்காக போராடியவர்கள் LTTE இயக்கத்தினர் மாத்திரமே. 

தமிழ் இயக்கங்களில் LTTE, EROS, TELO, EPRLF, PLOTE ஆகியன பிரபலமானது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்துடன் LTTE தவிர்ந்த ஏனையவை தனி நாட்டுக்கான கோரிக்கைகளை கைவிட்டன. 

ஆனால் 40 க்கு மேற்பட்ட ஆயுதம் தாங்கிய இயக்கங்களும், குழுக்களும் வடகிழக்கில் செயற்பட்டதனை இன்றைய இளைய தமிழ் சமுதாயத்தினர்கள் அறிந்திருக்கவில்லை.  

1985 க்குப் பின்பு கிழக்கில் இயக்கங்களின் செயற்பாடுகள் அதிகரித்ததனால் தமிழ் – முஸ்லிம் முரண்பாடுகள் வன்முறைகளாக மாறியது. 1987 ல் இந்தியப் படையினரின் வருகைக்குப் பின்பு சில தமிழ் இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை திட்டமிட்டு உருவாக்கியது. 

வடகிழக்கில் செயற்பட்ட பலம்பொருந்திய இயக்கங்கள் பற்றிய விபரங்களை இங்கே பதிவிடுகிறேன்;

ENLF - Eelam National Liberation Front;- 1984 ல் EROS, TELO, EPRLF ஆகியன இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு. பின்னர் LTTE யும் இதில் இணைந்தது. ஆனால் 1986 ல் LTTE ஏனைய தமிழ் இயக்கங்களைத் தாக்கத் தொடங்கியதால் இந்த கூட்டமைப்பு சிதைந்தது. 

Three Star / Tri-Star;- PLOTE, EPRLF, TELO ஆகிய மூன்று இயக்க முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு. 1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட இந்த மூன்று இயக்கங்களின் உறுப்பினர்களை இணைத்து LTTE யினரை எதிர்கொள்வதற்காக இந்திய படையினரினால் உருவாக்கப்பட்டது.  

LTTE யினர் Tri-Star மீது தாக்குதல் நடத்தி 100 க்கும் மேற்பட்டவர்களை கொன்றனர். அதன்பின்பு இவ்வியக்கம் பலயீனமடைந்தது.  

ENDLF - Eelam National Democratic Liberation Front;- அடுத்த கட்டமாக ENDLF உருவாக்கப்பட்டது. Three Star, PLOTE, EPRLF ஆகிய உறுப்பினர்களைக் கொண்டு 1987 இல் திரு. பரந்தன் ராஜன் தலைமையில், இந்திய புலனாய்வு அமைப்பான RAW வினால் உருவாக்கப்பட்டது. 

1990 இல் இந்திய படையினர் இலங்கையை விட்டு வெளியேறும்போது அவர்களுடன் சேர்ந்து ENDLF இயக்க உறுப்பினர்களும் வெளியேறியதுடன், தற்போதும் இவ்வியக்கம் இந்தியாவில் செயற்படுவதாக செய்திகள் உள்ளது.   

TELA - Tamil Eelam Liberation Army;- TELO இயக்கத்திலிருந்து உருவான குழு. அதன் தலைவர் Oberoi Thevan. 1983ல் LTTE யினரால் கொல்லப்பட்ட பின்னர் பெரும்பாலான TELA உறுப்பினர்கள் PLOTE இயக்கத்தில் இணைந்தனர்.   

TELC - Tamil Eelam Liberation Cobras;- மட்டக்களப்பை தளமாகக் கொண்டு செயல்பட்ட ஆயுதக் குழு. இதனை “Cobra Army / நாஹா படை” என்றும் அழைத்ததாக பதிவுகள் உள்ளன. 

TENA - Tamil Eelam National Army;- 1983 க்கு பின்பு உருவான மற்றொரு ஆயுதக் குழு. Amirthalingam Baheerathan என்பவருடன் தொடர்புபடுத்தப்படுகிறது. 

TERO - Tamil Eelam Revolutionary Organization;- இதுவும் TELO இயக்கத்திலிருந்து பிரிந்த சிறிய அமைப்பு; “Sudan Ramesh” உடன் தொடர்பு படுத்தப்படுகிறது. 

TERPLA - Tamil Eelam Revolutionary People's Liberation Army;- Thangarasa தலைமையுடன் தொடர்புபடுத்தப்படும் மற்றொரு குழு.  

TELE - Tamil Eelam Liberation Extremists;- “TELE Jegan” தலைமையில் செயற்பட்டதாகவும், பின்னர் அவர் LTTE யினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல் உள்ளது.  

Razeek Group / ராசீக் குழு;- இது மிகவும் சக்திவைந்ததும், ஆபத்தான குழுவாகவும் பேசப்பட்டது. மட்டக்களப்பில் LTTE யினருக்கு பாரிய சவாலாக இந்து குழு இருந்தது 

“ராசீக்” என்று அழைக்கப்பட்ட முத்துலிங்கம் கணேஷ்குமார் EPRLF இயக்கத்தின் மூத்த உறுப்பினர். இந்தியப்படை நிலைகொண்டிருந்த காலத்தில் “மண்டையன் குழு” என அழைக்கப்பட்ட குழுவாகவும், பல படுகொலைகளை வழிநடத்தியதாகவும் கூறப்படுகின்றது. 

பின்னர் EPRLF இயக்கத்திலிருந்து விலகி, கிழக்கில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டது. 

ராசீக் குழுவில் சுமார் 150 பேர் இருந்ததாகவும், அவர்களில் சுமார் 120 பேர் இலங்கை இராணுவத்தின் மாதாந்த சம்பளம் பெற்றதாகவும் குறிப்பிடுகிறது. 1999 ல் LTTE யின் தற்கொலைத் தாக்குதலில் ராசீக் கொல்லப்பட்டார். 

மண்டையன் குழு;- இது தனியாக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் என்பதைவிட, EPRLF இயக்கத்தின் ராசீக் தலைமையிலான படுகொலைகளை நிகழ்த்துவதற்கான துணைக் குழுவாக செயற்பட்டதாக குறிப்பிடப்படுகின்றன. 

Mohan Group / பிளட் மோகன்;- இது ராசீக் குழு போன்று PLOTE இயக்கத்திலிருந்த மோகன் என்பவர் தலைமையில் இயங்கிய குழு. இது 90 களில் அரச ஆதரவுடன் செயற்பட்ட இராணுவ துணை அமைப்பாகும்.   

EPDP;- EPRLF இயக்கத்திலிருந்து பிரிந்து சென்று டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட இயக்கமாகும். பல படுகொலை சம்பவங்களுடன் தொடர்புள்ளதாக செய்திகள் உள்ளது. 

TMVP; LTTE இயக்கத்திலிருந்து 2004 இல் பிரிந்து சென்று அரச ஆதரவாக கருணா குழு, பிள்ளையான் குழு என்ற ரீதியில் செயற்பட்டனர். இறுதி யுத்தத்தில் இவர்களின் பங்களிப்பு இருந்ததாக கூறப்படுகின்றது. 

மேலும், மேலே குறிப்பிடப்படாத வடகிழக்கில் செயற்பட்ட இயக்கங்களின் பெயர்களை கீழே பதிவிடுகிறேன். 

ELDF -Eelam Liberation Defence Front

ELO -Eelam Liberation Organisation

ELT -Eelam Liberation Tigers

GATE -Guerrilla Army of Tamil Eelam

NLFT -National Liberation Front of Tamil Eelam

PLFT -People's Liberation Front of Tamil Eelam

RFTE -Red Front of Tamil Eelamists

RW -Revolutionary Warriors

SRSL -Socialist Revolutionary Social Liberation

TEA -Tamil Eelam Army

TEC -Tamil Eelam Commando

TEDF -Tamil Eelam Defence Front

TEEF -Tamil Eelam Eagles Front

TELG -Tamil Eelam Liberation Guerrillas

TESS -Tamil Eelam Security Service

TPCU -Tamil People's Command Unit

TPSF -Tamil People's Security Front

TPSO -Tamil People's Security Organisation

Eagle Movement 

என் மனதில் எழும்புகின்ற கேள்வியும், சந்தேகமும் இதுதான், 

தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகவும், உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காகவும் இவ்வளவு சக்திமிக்க ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் இருக்கத்தக்கதாக, அதிலும் பெரும்பாலான இயக்கங்கள் அரச இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட நிலையில், “முஸ்லிம் ஜிஹாத் அமைப்பினர் இராணுவத்தோடு இணைந்து தமிழ் மக்களை கொலை செய்தார்கள்” என்ற குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதா ?     

தொடரும்................

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال