எம். யூ.எம்.சனூன்
கல்விச் சிறப்பு, தரமான கல்வி, தொழில்முறை மேம்பாடு மற்றும் நிறுவன வளர்ச்சி ஆகியவற்றில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வரும் கொழும்பு அமேசன் கல்லூரி மற்றும் கேம்பஸின் வளர்ச்சிக்கு புதிய ஆலோசனை சபை நியமிக்கப்பட்டுள்ளது.
அமேசன் கல்லூரி மற்றும் கேம்பஸின் பயணத்தில் இந்த நியமனம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனுபவமிக்க கல்வியியலாளர்கள், ஆய்வாளர்கள், தொழில் முறை நிபுணர்கள் மற்றும் துறை சார் வல்லுநர்களை உள்ளடக்கியதாக புதிய ஆலோசனை சபை அமைக்கப்பட்டுள்ளது.
அமேசன் கல்லூரி மற்றும் கேம்பஸின் கல்வி மற்றும் தொழில்முறை தரங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான மூலோபாய வழிகாட்டலையும் இந்த சபை வழங்கும்.
அமேசன் கல்லூரி மற்றும் கேம்பஸின் கொழும்பு வளாகத்தில் அண்மையில் (13) இதனது அங்குரார்பன நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது புதிய ஆலோசனை சபை உறுப்பினர்களாக பின்வருவோர் நியமனம் செய்யப்பட்டனர்.
கொழும்புப் பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர், முன்னாள் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் பரீனா ருசைக், கொழும்புப் பல்கலைக்கழகமூத்த விரிவுரையாளர், முன்னாள் வரலாற்றுத் துறைத் தலைவர் கலாநிதி தர்ஷி தொரடெனிய, கலாநிதி அவங்கா பெர்னாண்டோ (மூத்த விரிவுரையாளர், CEDREP பணிப்பாளர், சமூகவியல் துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் கலாநிதி பஷீர் ரிஸ்கான் (DEng, MEd, BSc (CS), தரவு அறிவியல் பேராசிரியர் மற்றும் கணினி மற்றும் தகவலியல் கல்லூரி பீடாதிபதி, மலேசியா அல்புகாரி சர்வதேசப் பல்கலைக்கழகம்) கலாநிதி அஷ்கர் மொஹமட் (உதவி பேராசிரியர், பிந்தைய முனைவர் ஆய்வு, தொழில்முறை சமூகப் பணியாளர், உளவியல் ஆலோசகர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர், PhD (வுஹான், சீனா), MSW, BSW (Hons NISD), LLB (Hons – Oxford Brookes University, UK), கலாநிதி கல்பாரி நெத்ராங்கினி பிடிகல (ஆலோசனை உளவியலாளர், நிறுவன நலவாழ்வு ஆலோசகர், EMDR சிகிச்சையாளர், ஆசிரி மருத்துவமனைகள்), கலாநிதி ஷெஹ்வர் சுபைர் (ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வியில் PhD, கல்வியில் முதுகலைப் பட்டம் (மலேசியா), BSc Teaching Technology, NVQ Level 4 & 5 , விசேட தேவைகள் கல்வியில் சான்றிதழ் பெற்றவர்)
புதிதாக நியமிக்கப்பட்ட ஆலோசனை சபை, அமேசன் கல்லூரி மற்றும் கேம்பஸின் நிறுவனர் மற்றும் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் மற்றும் கல்வி, கல்விசாரா பணியாளர்களுடன் இணைந்து செயற்படவுள்ளது.
இதன் மூலம் கல்வித் தரம், மாணவர் மேம்பாடு, நிறுவன நிர்வாகம், தொழில்முறை தரநிலைகள் மற்றும் எதிர்கால கல்வி முயற்சிகள் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அறிவு, தொழில்முறைத் திறன், புத்தாக்கம் மற்றும் மாணவர்களின் வெற்றி ஆகிய அனைத்தும் ஒருங்கிணையும் சிறந்த கல்வி நிறுவனத்தை உருவாக்குவதற்கான அமேசன் கல்லூரி மற்றும் கேம்பஸின் உறுதிப்பாட்டை இந்த புதிய அத்தியாயம் மேலும் வெளிப்படுத்துகின்றது.


