JobVibe.lk - Sri Lanka Job Portal

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வாசனைத் திரவியங்கள் மற்றும் சங்குகள் கற்பிட்டி இலந்தையடியில் கைப்பற்றிய கடற்படை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையால் கற்பிட்டி, இலந்தையடி கடற்கரைப் பகுதியில்  செவ்வாய்க்கிழமை (2026 செப்டம்பர் 29) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் உலர் மஞ்சள், ஏலக்காய் தோல் மற்றும் சங்குகள் அடங்கிய தொகை கைப்பற்றப்பட்டது 

வடமேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான 'விஜய' நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, இலந்தையடி கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பதினைந்து (15) உறைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, அந்த உறைகளுக்குள் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நூற்று முப்பத்தெட்டு (138) கிலோகிராம் உலர் மஞ்சள் துண்டுகள், எண்பது (80) கிலோகிராம் ஏலக்காய் தோல் மற்றும் முந்நூற்று எழுபது (370) சங்குகள் என்பன கண்டெடுக்கப்பட்டன. 

மேலும், கடற்படை நடவடிக்கைகளின்போது கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், கடற்படையால் கைப்பற்றப்பட்ட இந்தப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொளிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.








Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال