JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் தில்லையடியில் புதிய வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன் 

தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ் தேசிய வீடமைப்பு திட்டத்தினூடாக வறிய குடும்பமொன்றின் வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு புத்தளம்  தில்லையடியில் அண்மையில் இடம்பெற்றது. 

தேசிய ரீதியில் வறிய குடும்பங்களின் வீட்டுக்கான கனவை நிவர்த்தி செய்யும் வகையில் இடம்பெறும் தேசிய வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், புத்தளம் மாநகரசபையின் முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத், புத்தளம் மாநகர சபை உறுப்பினர் சஹ்ரான் தாஜுதீன், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிராந்தியத்துக்கான கல்வி, சுகாதாரம், போக்குவரத்துக்கான இணைப்பாளர் எம்.என்.எம்.ஜஹாஸ் உள்ளிட்ட தில்லையடி பிரஜா சக்தி உறுப்பினர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.














Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال