JobVibe.lk - Sri Lanka Job Portal

வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன் தொகையுடன் 3 சந்தேகநபர்கள் மன்னார் சௌத்பார் பகுதியில் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினால் (2026 செப்டம்பர் 28) மன்னார் சௌத்பார் உப்பு நீரேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன் தொகையுடன் மூன்று (03) சந்தேகநபர்களும் ஒரு டிங்கி படகும் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் 'கஜபா' நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, மன்னார் சௌத்பார் உப்பு நீரேரி பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அங்கு, வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முன்னூறு (300) கிலோகிராம் அளவிலான மீன் தொகையைக் கடத்திச் சென்ற, 20 மற்றும் 64 வயதுக்கு இடைப்பட்ட, மன்னார் பகுதியைச் சேர்ந்த மூன்று (03) சந்தேகநபர்களும் அந்த டிங்கி படகும் இவ்வாறு சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட சந்தேகநபர்களும், சிறிய படகும், மீன் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்பிடி ஆய்வாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.







Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال