எம்.யூ.எம்.சனூன்
2026ம் ஆண்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரிட்சை எழுதி வெற்றி பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் பீ. ஜெனற்ராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை (25) நடைபெற்றது.
இப்பாடசாலை மாணவர்கள் 2018 க்கு பின்னர் வெட்டுப்புள்ளிக்கு மேல் ஏ.எப். அப்லா 132 புள்ளிகளையும், 70 புள்ளிகளுக்கு மேல் 82.35 சதவீதத்தைப் பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.
இந்த சாதனையானது பாடசாலை வரலாற்றில் எட்டு வருடங்களுக்கு பிற்பாடு நிகழ்த்தப்பட்டுள்ளது.
மேலும் இப்பாடசாலையை கடந்த வருடம் பொறுப்பேற்ற அதிபர் பீ.ஜெனற்ராஜ் தலைமையில், ஏனைய ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் ஒத்துழைப்புடனும், விஷேடமாக தரம் ஐந்து வகுப்பு ஆசிரியரான திருமதி.சபரூனின் பயிற்றுவித்தலின் ஊடாக இச்சாதனை நிகழ்த்தப்பட்டமை விசேட அம்சமாகும்.
இந்த பாராட்டு விழா நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக புத்தளம் பங்கின் பங்குத் தந்தை அருட்பணி ஜானித் கௌசல்ய பெரேரா, புத்தளம் வலயக் கல்வி பணிமனையின் தமிழ் மொழி அழகு மற்றும் ஆரம்பப் பிரிவு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி ஏ. அஸ்கா, புத்தளம் வடக்கு கோட்ட கல்வி பணிமனையில் கல்வி பணிப்பாளர் எப். நஸ்ஸியா பேகம், பணி நிறைவு பெற்ற உதவி கல்விப்பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர், பணி நிறைவு பெற்ற பாட இணைப்பாளர் வீ. அருணாகரன், முந்தல் பாடசாலை அதிபர் ஏ.எப்.ஜெயகாந், நாயக்கர் சேனை பாடசாலை அதிபர் வீ. ராமநாதன், ஆரம்ப பிரிவு ஆசிரியர் ஆலோசகர் திரு.கபீல், இந்துக்கல்லூரி அதிபர் திரு. தம்பி துரை மற்றும் பிரதி அதிபர் சூரியகுமார், மணல் தீவு ஆலய சபை பொருளாளர், மதீனா நகர் பள்ளிவாசல் தலைவர், பாடசாலையின் உதவி அதிபர், அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலம் விரும்பிகள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்த நிகழ்வு சிறப்பிக்க முந்தலை சேர்ந்த திரு.ஜெயகாந்த் மற்றும் குடும்பத்தினர், கொழும்பை சேர்ந்த திரு. பிரதீஸ், திருமதி ஷமிலா ஆசிரியர், தொழிலதிபர் இன்சாத் மற்றும் தரம் ஐந்து மாணவர்களின் பெற்றோர்கள் பொருட்களாகவும் பண உதவிகளின் மூலமும் நன்கொடையாக அளித்து இவ்விழாவை சிறப்பித்தார்கள்.
மேலும் இந்நிகழ்வை சிறப்பிக்க தரம் 1, 2, 3, 4 மாணவர்களின் நடன நிகழ்ச்சியும் மற்றும் தரம் ஐந்து மாணவர்களின் நன்றி உரையும் அலங்கரித்தது. இறுதியில் பாடசாலைக் கீதத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.




























