JobVibe.lk - Sri Lanka Job Portal

நேபாளில் RSS சங்கிகளின் திட்டம் தோல்வி. அரசுக்கு பாராட்டு, இலங்கை கலவரமும் ஓர் படிப்பினை.

நேபாள் நாட்டில் ஏற்பட்டது போன்று வன்முறை இந்தியாவில் ஏற்பட்டிருந்தால், அது பழம் நழுவி பாலில் வீழ்ந்ததுபோன்று மோடியின் BJP அரசு அதனை அரசியலாக்கியிருக்கும். ஆனால் நேபாள் பிரதமர் Balendra Shah அவர்கள் எந்தப் பாகுபாடுமில்லாமல், நேர்மையாக இந்த பிரச்சினையை அணுகியுள்ளார்.  

இந்த வன்முறை முழுமையாக முடிந்துவிட்டது என்று கூற முடியாது. பதட்டம் நிலவுகிறது. ஆனாலும் முடியுமானவரையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ஊரடங்கு அமுலில் உள்ளது.  

தென்கிழக்கு நேபாளின் Sunsari மாவட்டத்தில் ஒரு இந்து மத நிகழ்வுக்காக ஒலிபெருக்கி, இசை மற்றும் மதக் கொடிகள் தொடர்பாக முஸ்லிம்களுடன் ஏற்பட்ட வாய்த் தகராறில் ஆரம்பித்து, அது வன்முறையாக மாறி, பின்பு அருகிலுள்ள பகுதிகளுக்கும் பரவியது. 

இதில் குறைந்தது 3 பேர் உயிரிழந்து, 25 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், பல கடைகள், வாகனங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன. மீண்டும் வன்முறைகள் பரவாமல் தடுக்கும் பொருட்டு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

இலங்கையில் 2018 இல் திகன கலவரமும், 2019 இல் வடமேல் மாகாணம் போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் ஏற்பட்டபோது இரண்டு நாட்களுக்கு பின்புதான் படைகள் முகாமைவிட்டு வெளியே வந்ததனை இங்கே நினைவு கூறுகிறேன்.     

பிரதமர் Balendra Shah அவர்கள், அனைத்து இன மக்களையும் அமைதி பேணுமாறு கோரியதுடன், சம்பவம் குறித்து நியாயமான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென்றும் அறிவித்துள்ளார்.   

இந்த வன்முறை சம்பவத்தை நாடுதழுவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமாக மாற்றுவதற்கு இந்தியாவின் RSS சங்கிகள் எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளது. 

அதாவது இந்தியாவிலிருந்து RSS சங்கிகள் நேபாள் நாட்டுக்குள் ஊடுருவி வன்முறைகளை ஏற்படுத்த எடுத்த முயற்சிகளை நேபாள் நாட்டு பாதுகாப்புப் படையினர் கட்டுப்படுத்தியதுடன், பலரை கைது செய்தும் உள்ளனர். 

எனவே பக்கச்சார்பின்றி செயற்படுகின்ற நேபாள் நாட்டின் பிரதமரையும், அதன் பாதுகாப்புப் படைகளையும் பாராட்டுவோம். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது – ஸ்ரீ லங்கா




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال