(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாப்பு ஆலோசகரான லெப்டினன்ட் கேணல் மெத்யூ ஹவுஸ் (Lieutenant Colonel Matthew House), செவ்வாய்க்கிழமை (2026 ஆகஸ்ட் 04) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காகக் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவைச் சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாப்பு ஆலோசகரான லெப்டினன்ட் கேணல் மெத்யூ ஹவுஸ், 27வது கடற்படைத் தளபதியாகக் கடமைகளைப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவிற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் சுமுகமாகக் கலந்துரையாடினார்.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதி, இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாப்பு ஆலோசகருக்கு ஒரு நினைவுப் பரிசை வழங்கினார்.



