JobVibe.lk - Sri Lanka Job Portal

நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

நீதிமன்ற மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி ஆகியோர் அடங்கிய அரசாங்க பிரதிநிதிகள் குழு இன்றைய தினம் (09) ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையை (ACJU) சந்தித்து, நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைத் துறையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்புகள் குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளனர்.

ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முஃப்தி, அதன் பொதுச் செயலாளர் அஷ்- ஷெய்ஃ அர்கம் நூராமித் மௌலவி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், நீதித்துறை அமைப்பு தொடர்பாக தற்போது சமூகத்தில் பரவி வரும் தவறான தகவல்களைத் தெளிவுபடுத்தி, அரசாங்கத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال