JobVibe.lk - Sri Lanka Job Portal

அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே!.

உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமானதொரு கட்டமாக அமையும் 2026 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயர்தரப் பரீட்சை என்பது வெறுமனே ஒரு சாதாரண  பரீட்சை மாத்திரமல்ல, அது உங்கள் எதிர்காலக் கனவுகள், இலக்குகள் மற்றும் உயர்ந்த சாதனைகளுக்கான ஒரு முக்கியமான படிக்கல்லாகும்.

“முயற்சியும் நம்பிக்கையும் இருக்கும் இடத்தில் வெற்றி என்றும் சாத்தியமே!”

பரீட்சை மண்டபத்திற்குள் செல்லும் போது எவ்வித அச்சமோ பதற்றமோ இன்றி, முழுமையான தன்னம்பிக்கையுடனும் தெளிவான சிந்தனையுடனும் பரீட்சைக்கு முகங்கொடுங்கள். இறைவன் மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் பெற்ற அறிவையும் உழைப்பையும் சிறந்த முறையில் வெளிப்படுத்துங்கள்.

இன்றைய மாணவர்கள் தான் நாளைய சமூகத்தின் வழிகாட்டிகளும், இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர்களும் ஆவர். மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்த ஆளுமைகளாக நீங்கள் உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

உங்கள் வெற்றிச் செய்தியை எதிர்பார்த்து உங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.

நீங்கள் அனைவரும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, உங்கள் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

உங்கள் எதிர்காலம் ஒளிமயமாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

(பாராளுமன்ற உறுப்பினர்)




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال