JobVibe.lk - Sri Lanka Job Portal

'நத்வதுல் அஸாபீர்' புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான குறுங்கால தர்பியா பயிற்சிநெறி

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அறக்யாள இலாஹிய்யா பெண்கள் அறபுக் கல்லூரியில் புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான குறுங்கால தர்பியா பயிற்சிநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான நான்கு மாத காலப் பயிற்சி நெறியாகும். பயிற்சிநெறி இம்மாதம் ஆரம்பமாகும்.

பயிற்சி நெறியில், தஜ்வீத், கிராஆ, ஹிப்ழ், துஆ (அன்றாட சந்தர்ப்ப துஆக்கள்), அடிப்படை பிக்ஹ் (சுத்தம், தொழுகை), ஹதீஸ் மனனம் (குறிப்பிட்ட ஹதீஸ்கள்), விழுமிய கற்கைகள் (Values), மென் திறன் பயிற்சி போன்றவை கற்பிக்கப்படவுள்ளன.

பயிற்சி நெறியில், அல்-ஹாபிழ் எம்.எச்.எம். இனாம் (றஷாதி), அல் ஹாபிழ் ஓ.எல்.ஜிப்ரி (தீனி), அஷ்ஷெய்க்  ஏ.பி.எம் அர்சாத் நளீமி (BA), முஅல்லிமா  எப். ஹுஸ்னா, அஷ்ஷெய்க்  எஸ்.ஏ.எம்.றிஸ்வி (நளீமி), எம்.எஸ்.எம்.பஹீம் (CIMA (PF) AAT (PF), எம். முன்தஸிர் (BA) ஆகியோர் இணைந்து  போதிக்கவுள்ளனர்.

மேற்படி கற்கை நெறியில் தங்களது பிள்ளைகளுக்கும் வாய்ப்புக்களை அமைத்துக்கொடுத்து பிள்ளைகளின் ஈருலக வெற்றிக்கு பங்காளர்களாக ஆக விரும்பினால், 0775775757, 0779948030 என்ற கையடக்கத் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் மேலதிக தகவல்களை  அறிந்து கொள்ளலாம்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال