எம். யூ.எம்.சனூன்
கல்பிட்டி ஏத்தாளை பிரதேச வாசிகளின் வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான வசதிகளை அதிகரித்து, பிரதேசத்தின் பொருளாதார செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்படவுள்ள ஏத்தாளை பலநோக்கு வர்த்தக மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் அடிக்கல் நடும் நிகழ்வு (14) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இத்திட்டத்திற்காக மாகாண அமைச்சின் ஊடாக ரூபா ஒரு கோடி மற்றும் கல்பிட்டி பிரதேச சபையின் ஊடாக ரூபா 92 இலட்சம் என மொத்தமாக ரூபா 1 கோடியே 92 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அடிக்கல் நடும் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கயான் ஜானக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம்.பைசல், கல்பிட்டி பிரதேச சபையின் தலைவர் ஏ.எஸ்.எம். ரிகாஸ், உப தலைவர் சமன் குமார, கல்பிட்டி தொகுதி அமைப்பாளர் சஞ்சீவ பெர்னாண்டோ, ஏத்தாளை வட்டார கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஷிபான் உட்பட சபை உறுப்பினர்களும், கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் மற்றும் பிரதேச வாசிகளும் கலந்து கொண்டனர்.







