JobVibe.lk - Sri Lanka Job Portal

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட முழு மற்றும் பகுதியளவு சேதங்களுக்ககான இழப்பீடு வழங்கும் நிகழ்வு.

 எம்.யூ.எம்.சனூன்

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட புத்தளம் பிரதேச செயலக பிரிவில் உள்ள குடும்பங்களுக்கு ஐந்தாம் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு அண்மையில் (11) புத்தளம் பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சருமான பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம். பைசல் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் புயலினால் முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும்,  வர்த்தகர்களுக்குமான இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் செயலாளர், இணைப்புச் செயளாலர், புத்தளம் பிரதேச செயலாளர் எஸ்.பி.விதானகே, புத்தளம் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், புத்தளம் மாநகர சபையின் பிரதி மேயர் எம்.என்.எம்.நுஸ்கி மற்றும் புத்தளம் பிரதேச சபையின் தலைவர், புத்தளம் பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரஜா சக்தி தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், புயலினால் வாழ்வாதார பாதிப்புக்குள்ளான முழு மற்றும் பகுதியளவு உரிமையாளர் கள் மற்றும் வர்த்தகர்களும் கலந்து கொண்டனர்.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال