JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்பிட்டி பிரதேச செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட "அருணெல்ல" நடமாடும் சேவை.

எம்.யூ.எம்.சனூன்

"பாதுகாப்பான காணி, அழகான வாழ்க்கை" எனும் மகுடத்துக்கு ஏற்ப அரச காணிகளின் தெளிவான உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் கல்பிட்டி பிரதேச செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட "அருணெல்ல"  நடமாடும் சேவை (13) மிகவும் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டது.  

அதனுடன் சேர்ந்து பொதுமக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

கல்பிட்டி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஜே. எம். பைசல் கலந்து கொண்டார். 

மேலும் கல்பிட்டி பிரதேச சபையின் உப தலைவர் சமன் குமார ஹேரத், பிரதேச சபை உறுப்பினர் சஞ்சீவ பெர்னாண்டோ ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

மாகாண காணி ஆணையாளர், மாகாண பிரதி காணி ஆணையாளர்கள், மாகாண காணி ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், கல்பிட்டி மற்றும் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலக பணியாளர்கள் உட்பட பல்வேறு அரச நிறுவன அதிகாரிகளும் தமது பங்களிப்பை வழங்கினர்.

இந்த நடமாடும் சேவையின் மூலம் பிரதேச மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகள் வழங்கப்பட்டதுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த சேவைகளைப் பெற்று பயனடைந்தனர்.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال