JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி தரம் 11 மாணவர்களின் சாதனைப் பாராட்டு நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் கல்லூரியின் ஏ.எச்.எம்.அஸ்வர் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரி அதிபர் ஐ.ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெற்றோர்கள், பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கொழும்பு அமேசன் கெம்பஸ் பணிப்பாளர் கலாநிதி இல்ஹாம் மரிக்கார் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டல்களையும் ஊக்கத்தையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டும் கௌரவிப்பும், அவர்களின் கல்வி அடைவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான முக்கிய ஊக்க சக்தியாக அமைந்தது. 

மாணவர்களின் முயற்சியையும் திறமையையும் அங்கீகரிக்கும் இத்தகைய நிகழ்வுகள், எதிர்காலத்தில் மேலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு அவர்களை ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை.

மாணவர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டி, அவர்களின் எதிர்கால வெற்றிக்கான பாதையை மேலும் வலுப்படுத்திய மிகச் சிறப்பான நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال