(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
2026 ஜூலை 22 முதல் 29 வரை பாகிஸ்தானில் நடைபெற்ற 2026 மத்திய ஆசிய ஆடவர் வாலிபோல் தொடரில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற இலங்கை ஆடவர் வாலிபோல் அணி ஒட்டுமொத்தப் போட்டியிலும் 3ஆம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இப்போட்டித் தொடரில் இலங்கை கடற்படை ஆடவர் வாலிபோல் குழாமைச் சேர்ந்த ஓடினரி சீமன் ஜி. திலகராஜா பங்கேற்றிருந்தார்.
ஆறு (06) நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இப்போட்டித் தொடரின் 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் சவாலான உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி, விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3 ஆம் இடத்தைக் கைப்பற்றியது.
இப்போட்டித் தொடர் முழுவதும் இலங்கை ஆடவர் அணியின் Libero வீரராக விளையாடிய ஓடினரி சீமன் ஜி. திலகராஜாவின் திறமையான ஆட்டம் சிறப்பான முறையில் வெளிப்பட்டிருந்ததுடன், இவ் வெற்றி இலங்கைக்கும் இலங்கை கடற்படைக்கும் பெரும் கௌரவத்தையும் புகழையும் பெருமையையும் புகழையும் ஈட்டித் தந்துள்ளது.






