JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கொந்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஐவர் பல்கலைக்கழகம் தெரிவு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் கொந்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து 2025 ம் ஆண்டு உயர் தர பரீட்சைக்கு தோற்றிய 10 மாணவர்களில் 05 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஐ.என்.எம்.எம் லாஹிர் தெரிவித்தார் 

அதன்படி ஏ.ஆர்.ஏ றிமாஸ் உடற்கல்வி கற்கை நெறிக்காகவும்  எம்.ஏ.எம்.எப் பசீனா கலை கற்கை நெறிக்காகவும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கும், என் மஹ்ரா பர்வின் முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் கற்கை நெறிக்காகவும் என்.எப் ஹம்னா மற்றும் பீ.எப் அப்ரின் ஆகிய இருவரும் இஸ்லாமிய கற்கை நெறிக்காகவும் தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளாதாகவும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளதுடன், கொத்தாந்தீவைசச் சேர்ந்த எம்.எச். எப் ஹம்னா தனியார் பரீட்சாத்தியாக இரண்டாவது முறையாக இம்முறை உயர் தர பரீட்சைக்கு தோற்றி கலை கற்கை நெறிக்காக சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார். 

இதேவேளை இம்முறை கொத்தாந்தீவு கிராமத்திலிருந்து ஆறு பேர் பல்கலைக்கழகம் செல்கின்றமை  விஷேட அம்சமாகும்.

இம் மாணவர்களின் முயற்சிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் ஐ.என்.எம்.எம் லாஹிர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال