JobVibe.lk - Sri Lanka Job Portal

மதுரங்குளி கனமூலையில் வை.எம்.எம் ஏ கிளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

மதுரங்குளி கனமூலை கிராமத்தில் வை.எம்.எம்.ஏ. (YMMA) நிறுவனத்தின் புதிய கிளை அமைப்பது தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று புத்தளம் கிளையின் ஏற்பாட்டில்  ஓய்வு பெற்ற அதிபர் என். எம். எம். நஜீப்  தலைமையில்  வை.எம்.எம்.ஏ புத்தளம் மாவட்ட பணிப்பாளர் எம்.டி எம் நபீல் ஆசிரியரின் பங்குபற்றுதலுடன் கனமூலை கிராமத்தில்  இடம்பெற்றது.

மதுரங்குளி கனமூலை கிராமத்தில் வை.எம்.எம்.ஏ. கிளையொன்றை ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன்  எதிர்காலத்தில் வை.எம்.எம்.ஏ. முதலைப்பாளி கிளையின் ஊடாக கிராம மக்களின் நலனுக்காக பல்வேறு சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்திட்டப் பணிகளை முன்னெடுக்க உள்ளதுடன் முதலைப்பாளி கிராமத்து இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு வலுவூட்டல் மற்றும் சமூக நலனுக்கான புதியதொரு பாதை உருவாகுதல் என்பதனை அடிப்படையாகக் கொண்டும் இக் கலந்துரையாடல் அமைந்தமையும் குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال