(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம், எம். யூ. எம். சனூன்)
தேடல் மீடியா கல்லூரி புத்தளம் குளோபல் கல்லூரியுடன் இணைந்து நடாத்திய ஆரி எம்பிராய்டரி ஒரு நாள் பயிற்சிப் பட்டறை புத்தளத்தில் புதன்கிழமை (2026.07.29) தேடல் மீடியா கல்லூரியின் தலைவர் எஸ்.ஐ.எம் ஹம்தியின் தலைமையில் நடைபெற்றது.
இப் பயிற்சிப் பட்டறையானது, தேடல் மீடியா கல்லூரியின் குருணாகல் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் ஆரி எம்பிராய்டரி கலையின் சிரேஷ்ட வளவாளருமான ஐ.எச்.எப் இப்னா அத்தோடு உதவி பயிற்றுவிப்பாளராக கலந்துகொண்ட வளவாளர் என்.எப் ஸம்ஹா ஆகியோரால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
மேலும், தேடல் மீடியா கல்லூரியின் ஆலோசகர் பாத்திமா சுபியானி மூலம் பயிற்சிப்பட்டறைக்கு வருகை தந்தவர்களுக்கு சுய தொழில்முனைவு பற்றி தெளிவுபடுத்தப்பட்டதுடன் பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கான முழு வழிகாட்டுதல்களும் இப்பயிற்சிப் பட்டறையில் வழங்கப்பட்டது.


