JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபையின் புதிய தலைவராக எஸ்.ஆர்.எம் சலீம் ஆசிரியர் தெரிவு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம். யூ. எம். சனூன்)

நீண்ட நாட்களாக பெரும் எதிர்பார்ப்புடன் காணப்பட்டதும் புத்தளத்தில் பேசும் பொருளாகவும் இருந்து வந்த புத்தளம் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபைக்கான நிர்வாகிகள் தெரிவும் தலைவராக வரக்கூடியவர் யார் என்ற கேள்வி வெள்ளிக்கிழமை (31) இரவுடன் முற்றுப் பெற்றுள்ளது.

புத்தளம் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர் தெரிவு வாக்கெடுப்பு மூலம் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் வெள்ளிக்கிழமை (31) இரவு இடம்பெற்றது.

இதில் வாக்கெடுப்பு மூலம் 16 அங்கத்தவர்களும் .ஜமாத் அடிப்படையில் 05 அங்கத்தவர்களுமாக மொத்தம் 21 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் விபரம் 

சரீக் மஹாசின், எம். அல்தாப் , எம். சகீன், எம் உமைர், எம். பஸாஹத், ஏ.டப்யூ.எம் நசீப், ஏ.எச்.எம் அர்ஷாத், எல். முஹம்மத், எம்.கே.எம் ஹஸிப், ஏ.எஸ் அஸ்லம், எப் றகீப் மௌலவி, எஸ்.ஏ.எம் பர்ராஜ் மௌலவி, எம் எம் எம் ஆதிப் மௌலவி, ஏ.இமாம்தீன் மௌலவி, எஸ்.ஆர்.எம் சலீம் ஆசிரியர், எஸ் எஸ் எம் ஹஸீபுல்லாஹ் ஆகியோரும்


இஸ்லாமிய அமைப்புகள் அடிப்படையில் ஜிப்னாஸ் மௌலவி, அஜ்மல், சௌக்கி மௌலவி, பயாஸ் பாஹிம், முஹ்ஸின் மௌலவி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். 

இதில் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களுக்கிடையில் தலைவர் தெரிவு இடம்பெற்றது அதில் எஸ்.ஆர்.எம் சலீம் ஆசிரியர் புத்தளம் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உப தலைவராக ஏ.இமாமுதீன் மௌலவி, செயலாளராக எஸ்.ஏ.எம் பர்ராஜ் மௌலவி. உப செயலாளராக ஏ.டப்யூ.எம் நசீப் , பொருளாளராக சரீக் மஹாசின் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال