(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையின் 267வது பயிற்சி கடற்படை வீரர்கள் ஆள்சேர்ப்பின் கீழ் பயிற்சி கடற்படை வீரர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை (2026 ஆகஸ்ட் 13, 14 ) அட்மிரல் சோமதிலக்க திசாநாயக்க கேட்போர்கூடத்தல், பணிப்பாளர் நாயகம் நபர்கள் ரியர் அட்மிரல் சஞ்சீவ பிரேமரத்ன தலைமையில் நடைபெற்றது.
இலங்கை கடற்படையின் நிரந்தர மற்றும் தன்னார்வப் படைகள் உட்பட அனைத்து பிரிவுகளுக்குமாக மேற்கொள்ளப்பட்ட இந்த 267வது பயிற்சி கடற்படை வீரர்கள் ஆள்சேர்ப்பின் கீழ், 230 ஆண் பயிற்சி கடற்படை வீரர்களும் 100 பெண் பயிற்சி கடற்படை வீராங்கனைகளும் அடங்கலாக மொத்தம் 330 பயிற்சி கடற்படை வீரர்கள் கடற்படை சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
மேலும், இந்த ஆள்சேர்ப்பு நிகழ்வில் கடற்படை நபர்கள் பணிப்பாளர் கொமடோர் மனோஜ் லீலாரத்ன உள்ளிட்ட கடற்படைத் தலைமையக அதிகாரிகள், பயிற்சி கடற்படை வீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பலர் கலந்துகொண்டனர்.












கல்யாணம் நடந்தால் நல்லதுதானே
ReplyDelete