JobVibe.lk - Sri Lanka Job Portal

மதுரங்குளி கனமூலை வை.எம்.எம் ஏ புதிய கிளை அங்குரார்பணமும் புதிய நிர்வாகக் குழு தெரிவும்

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

மதுரங்குளி கனமூலை கிராமத்தில் வை.எம்.எம்.ஏ. (YMMA) நிறுவனத்தின் புதிய கிளை அங்குரார்பணமும் புதிய நிர்வாகக் குழு தெரிவும் புத்தளம் வை எம் எம்.ஏ  கிளையின் ஏற்பாட்டில்  ஓய்வு பெற்ற அதிபரும் கனமூலை பெரிய பள்ளிவாசலின் செயலாளருமான ஏ எம் நஜீப்  தலைமையில்  வை.எம்.எம்.ஏ புத்தளம் மாவட்ட பணிப்பாளர் எம்.டி எம் நபீல் ஆசிரியரின் பங்குபற்றுதலுடன் கனமூலை தாஹா முன்பள்ளி மண்டபத்தில் இடம்பெற்றது.

மதுரங்குளி கனமூலை கிராமத்தில் வை.எம்.எம்.ஏ. கிளையொன்று ஆரம்பிக்கப்பட்டு அக் கிளையின் ஊடாக கிராம மக்களின் நலனுக்காக பல்வேறு சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்திட்டப் பணிகளை முன்னெடுப்பதுடன் மதுரங்குளி கனமூலை கிராமத்து இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு வலுவூட்டல் மற்றும் சமூக நலனுக்கான புதியதொரு பாதை உருவாகுதல் என்பதனை நோக்கமாக கொள்ளப்பட்டதுடன் புதிய நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

அதன் படி தலைவராக எம்.எஸ்.எம் றசீன், உப தலைவராக பீ.எம் முபீன், செயலாளராக ஏ எல் எம் எப் அன்பஸ், உப செயலாளராக எம் எஸ் எம் றிஸ்வான், பொருளாளராக எம்.ஆர்.எம் லத்தீப் ஆகியோருடன் பல்வேறு துறை சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான பகுதித் தலைவர்களாக  எம் எச் நசீர்கான், எம் டி.ஐ சார்ம், ஜே.எம் சபீக் மற்றும் எம் எஸ் எம் சர்ஹான் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال