JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் திகழி மத்ரஸத்துல் முனவ்வராவில் மாணவர்களுக்கு அல்குர்ஆன் வழங்கும் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் திகழி  மத்ரஸத்துல் முனவ்வராவில் கல்வி பயிலும் சுமார் 80 மாணவர்களுக்கு அல்குர்ஆன் பிரதிகளை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. 

முஸ்லிம் செரிட்டி செரண்டிப் ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில், புத்தளம் திகழி பகுதியில் அமைந்துள்ள பகுதி நேர மத்ரஸத்துல் முனவ்வரா மாணவர்களுக்கே புனித அல்குர்ஆன் பிரதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் முஸ்லிம் செரிட்டி நிறுவனத்தின் ஸ்ரீலங்கா அமைப்பின் பணிப்பாளர் முஜாஹித் நிஸார், மத்ரஸாவின் அதிபர் அஷ்ஷெய்க் ரிஸ்வான், கொலனி பள்ளிவாசல் தலைவர் அஷ்ஷெய்க் மொஹமட், அங்கத்தவர்களான ரஊப், ராசிக், பிர்தௌஸ், ரம்ஸி மற்றும் இர்பான் மௌலவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வின் மூலம் மாணவர்கள் புனித அல்குர்ஆன் கல்வியை மேலும் சிறப்பாகக் கற்கும் வாய்ப்பைப் பெற்றதுடன், அவர்களின் இஸ்லாமிய கல்வி வளர்ச்சிக்கும் இது ஒரு முக்கியமான ஊக்கமாக அமைந்தது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال