JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் காஸிமிய்யாவில் "ஊழலற்ற மற்றும் மனிதநேயமிக்க பண்பாட்டு சமூகத்தை உருவாக்குதல்” விழிப்புணர்வு நிகழ்ச்சி.

எம்.யூ.எம்.சனூன்

முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, “ஊழலற்ற மற்றும் மனிதநேயமிக்க பண்பாட்டு சமூகத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை (29) புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில், கல்லூரி அதிபர் அஷ்ஷெய்ஹ் எச்.எம். மின்ஹாஜ் இஸ்லாஹியின் வழிகாட்டுதலின் கீழ் சிறப்பாக நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவரும், முகாமைத்துவ சபை உறுப்பினரும், ஸில்ஸலதுல் காஸிமிய்யீன் பழைய மாணவர் அமைப்பின் உப தலைவருமான அஷ்ஷெய்ஹ் அப்துல் கஹ்ஹார் காஸிமி (மதனி) சிறப்புரை ஆற்றி, ஊழலற்ற சமூகக் கட்டமைப்பு, மனிதநேயம், ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் இஸ்லாமிய விழுமியங்களின் முக்கியத்துவம் குறித்து பயனுள்ள விளக்கங்களை வழங்கினார்.

மேலும், இந்நிகழ்வை கல்லூரியின் கல்வி விவகாரப் பொறுப்பாளர் அஷ்ஷெய்ஹ் முஸ்தபா காஸிமி திறம்பட நெறிப்படுத்தியதுடன், கல்லூரியின் உஸ்தாத்மார்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

மாணவர்களிடையே நேர்மை, பொறுப்புணர்வு, மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது.

இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் கல்லூரியின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை கல்லூரி நிர்வாகம்  தெரிவித்துக் கொள்கிறது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال