JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்பிட்டி முகத்துவாரத்தில் 05 மில்லியன் பெறுமதியான 05 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

எம்.யூ.எம்.சனூன்

தித்வா புயல் காரணமாக கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக சேதமடைந்த ஐந்து வீடுகளை முழுமையாக மீள கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (29) புதன்கிழமை கல்பிட்டி முகத்துவாரம் கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.

இந்நிகழ்வு புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவரும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஜே.எம்.பைசல் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் மதத்தலைவர்கள், பிரஜா சக்தியின் சமூக மேம்பாட்டு சபை தலைவர்கள், கல்பிட்டி பிரதேச செயலக அரச ஊழியர்கள், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்,  கிராம மக்கள் மற்றும் புயலினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பயனாளிகளிகளும் இதில் கலந்து சிறப்பித்தார்கள்.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال