(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி டச்பே கிராமிய மீனவ அமைப்பின் ஏற்பாட்டில் முதன் முறையாக இடம்பெறும் இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்று எதிர்வரும் 2026 ஆகஸ்ட் மாதம் 08 ம் திகதி கலை 9 மணி முதல் 03 மணிவரை கற்பிட்டி சிந்தாத்திரி மாதா தேவாலய வளாகத்தில் இடம்பெற உள்ளது.
நோயற்ற கண்கள் எனும் தொனிப்பொருளில் இடம்பெற உள்ள இவ் இலவச கண் சிகிச்சை முகாமில் இலவச கண் பரிசோதனை மற்றும் தேவையுடையோருக்கு கண் கண்ணாடி பரிந்துரைக்கப்படுவதுடன் கண் நோய் தொடர்பான இலவச ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
