JobVibe.lk - Sri Lanka Job Portal

பனை வீரன் கவிதை நூலாசிரியர் பாஸ்கர் "கலை வித்தகன்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி தியாகராஜா மகேந்திர பாஸ்கர் எழுதிய புதுக் கவிதை நூலான பனை வீரன் கவிதை நூலை அச்சு பதிப்பு செய்த மூதூர் ஜே.எம்.ஐ பதிப்பகம் அவரின் கவிப் புலமையை பாராட்டி கௌரவிக்கும் முகமாக "கலை வித்தகன்" விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி நஷ்ர் பவுண்டேஷன் ஏற்பாட்டில் இடம்பெற்ற வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை  (2026/07/24) நஷ்ர் பவுண்டேஷன் தலைவர் எம்.ஏ.சீ.ஏ முத்தலிப் தலைமையில் கற்பிட்டி அக்ஷரா வரவேற்பு மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இதன் போது மூதூர் ஜே.எம்.ஐ பதிப்பகத்தின் கலை வித்தகன் விருது கற்பிட்டி சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் எச் எம் சியாஜ் அவர்களின் கரங்களால் நூலாசிரியர் தியாகராஜா மகேந்திர பாஸ்கருக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال