JobVibe.lk - Sri Lanka Job Portal

யாழ் மண்ணில் சாதனைப்படைத்த புத்தளம் எருக்கலம்பிட்டி இளைஞர் கழகம்.

எம்.யூ.எம்.சனூன்

36 வது தேசிய இளைஞர் பேரவையின் மூலம் மாவட்ட மட்டத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட காற்பந்தாட்ட போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி இளைஞர் கழகம் மாவட்ட சாம்பியனாக வெற்றி வாகை சூடினர்.

இவர்கள் 2025 ஆம் ஆண்டிலும் புத்தளம் மாவட்ட சாம்பியன்களாக மகுடம் சூடியவர்கள் என்பதும் சிறப்பம்சமாகும்.

தொடர்ந்து அகில இலங்கை ரீதியில் 25 ம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடாத்தப்பட்ட தேசிய ரீதியிலான போட்டியிலும் இவர்கள் பங்கேற்றனர்.

களுத்துறை மாவட்ட அணியுடன் மோதியதில் பெனால்டி முறையில்  04 : 03 என்ற கோல் கணக்கில் துரதிஷ்ட வசமாக தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினர்.

இந்த போட்டிக்கு தலைமை தாங்கி இவர்களை வழி நடத்திய தேசிய இளைஞர் பேரவையின் புத்தளம் தொகுதியின் உப தலைவர் ஆர்.எப்.எம். நிஸாத், புத்தளம் பொத்துவில்லு பிரஜா சக்தி தலைவர் எம்.ஜே.எம்.சிராஜ், ரத்மல்யாய த்மல்யாய வட்டார குழு உறுப்பினர் எம்.ஜாஹித் மற்றும் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் இஸ்ஸதீன் கியாஸ் ஆசிரியர் ஆகியோருக்கும், இதற்காக பொருளாதார உதவிகளை வழங்கிய தனவந்தர்களுக்கும் கிராம மக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்  தெரிவித்துள்ளனர்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال