(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ரனீஸ் பதுர்தீன் குடும்பத்துடன் கொழும்பில் இருந்து புத்தளம் திரும்பிக் கொண்டிருந்த போது அவரது வாகனம் முந்தல் பகுதியில் வைத்து கூலர் லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இச்சம்பவம் இன்று (25) சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது
இதன்போது மாநகர சபை உறுப்பினர் ரனீஸ் பதுர்தீன் மற்றும் அவரது குடும்பத்தினர் பலத்த காயங்களுடன் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பட்ட நிலையில் ஒருவர் மாத்திரம் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து சம்பவம் தகவல் அறிந்த உடன் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜே. எம். பைசல் மற்றும் புத்தளம் மாநகர மேயர் ரின்ஷாட் அஹமட் ஆகியோர் சம்பவம் இடத்திற்கு விரைந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





