(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு நான்கு வருடங்களின் பின் நிரந்தர பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பாணந்துறையைச் சேர்ந்த ஏ.ஜீ.எஸ் சுசந்த செவ்வாய்க்கிழமை (28) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடந்த நான்கு வருடங்களாக நிரந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்றி காணப்பட்ட நிலையில் தற்போது கற்பிட்டி பொலிஸ் நிலையத்தின் நிரந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக அவிசாவளை பொலிஸ் பிரிவிலும் கொழும்பு புலனாய்வு பிரிவில் நான்கு வருடங்கள் கடமையாற்றியவருமான ஏ.ஜீ.எஸ் சுசந்த நியமிக்கப்பட்டுள்ளார்
கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சர்வ மதத் தலைவர்களின் ஆசியுடன் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஜீ.எஸ் சுசந்த உரையாற்றும் போது தெரிவித்ததாவது:
பொலிஸ் நிலையத்தினை நாடி வரும் பொது மக்களுக்கு தாமதம் இன்றி தமது தேவைகளை பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தினை மாற்றியமைக்க தான் திட்டமிட்டுள்ளதாகவும் மக்களுக்கும் பொலிஸ் நிலையத்திற்குமான நெருங்கிய உறவினை பேனுவதுடன் சட்ட விரோத செயல்களை தடுப்பதற்கான முழுமையான வேலைத்திட்டம் மேற்க் கொள்வதற்கும் தாம் திடசங்கற்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


