JobVibe.lk - Sri Lanka Job Portal

தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

'க்ளீன் ஸ்ரீலங்கா' செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி” எனும் கருப்பொருளின்கீழ், பொது சுகாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செயற்படுத்தப்படும் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்காக இலங்கை கடற்படை தனது பங்களிப்பைத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.


இந்த டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் பதினேழாவது (19) நாளுக்காக சனிக்கிழமை (2026 ஜூலை 25) சுகாதார மருத்துவ அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த எண்பத்தெட்டு (88) கடற்படை வீரர்கள் இத்தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காகத் தமது பங்களிப்பை வழங்கினர்.


 இதன்படி ராகம, மஹர, பொரளை, பாணந்துறை, நாரஹேன்பிட்ட, களனி, வத்தளை, கம்பஹா மற்றும் முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் இரண்டாயிரத்து அறுநூற்று நாற்பத்தொன்பது (2,649) இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அங்கு டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய முன்னூற்று எண்பது (380) இடங்கள் இனங்காணப்பட்டன.

இத்தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு இணையாக, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை இன காண்பதற்காக அனைத்துக் கடற்படை கட்டளைகளுக்குள்ளும் முறையான சுற்றுச்சூழல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதனைத் தொடர்ந்து அவ்விடங்களைச் சுத்தப்படுத்தும் மற்றும் அழிக்கும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال