JobVibe.lk - Sri Lanka Job Portal

இந்திய கடற்படையின் ‘INS SHARDA’ கப்பல், செயல்பாட்டு தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் இலங்கைக்கு வருகை தந்தது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SHARDA’  புதன்கிழமை (2026 ஜூன்​ 10) சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.


இவ்வாறு இலங்கையை வந்தடைந்த Offshore Patrol Vessel (OPV) வகைக்குரிய ‘INS SHARDA’ என்ற கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் Kartik Sachdeva கடமையாற்றுகின்றார்.


 கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ள இந்தியக் கடற்படைக் கப்பலான ‘INS SHARDA’ இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் குழுவினர் இலங்கைக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال