கற்பிட்டியில டித்வா புயல் பாதிப்பை எதிர் நோக்கியவர்களுக்கான உளவளத்துறை செயலமர்வு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பிரதேச செயலகத்தில் டித்வா புயலின் பாதிக்கப்பட்டவர்களுக்கான முதலாவது விஷேட உளவளத்துறை தொடர்பான செயலமர்வு ஒன்று செவ்வாய்க்கிழமை (09) கற்பிட்டி பிரதேச செயலாளர் பீ.ஜீ எஸ்.என் பிரியதர்ஷினி தலைமையில் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இச் செயலமர்வின் விரிவுரையாளர்களாக கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உளவளத்துறை அதிகாரி எச் எம் நிப்ராஸ் மற்றும் உதவி உளவளத்துறை அதிகாரி என் வை பஹீமா பேஹம் ஆகியோருடன் அவர்களுக்கு உறுதுணையாக கற்பிட்டி செடோ சிறீலங்கா நிறுவனத்தின் உறுப்பினர்கள் தொண்டர்களாக கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வின் விரிவுரையாளர்கள் மக்களோடு மக்களாக டித்வா புயல் பாதிப்பு பற்றிய கலந்துரையாடல் மேற்கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு இயற்கை அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அதனை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் முதலுதவி செயற்திட்டங்கள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.







No comments