JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களை கௌரவித்த தவிசாளர் றிகாஸ்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர்  ஏ.எஸ்.எம் றிகாஸின் ஏற்பாட்டில், பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களுக்கான விசேட ஊக்குவிப்புத் திட்டம்  வழங்கும் நிகழ்வு  கற்பிட்டி பிரதேச சபையில் செயலாளர் கே.பீ ஜகத் குமார தலைமையில் இடம்பெற்றது 


கற்பிட்டி பிரதேசத்தை தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தினசரி அர்ப்பணிப்புடன் உழைக்கும் சுகாதார ஊழியர்களின் சேவையைக் கௌரவிக்கவும், அவர்களின் மனவலிமையை மேலும் ஊக்குவிக்கவும் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ எஸ் எம் றிகாஸின்  தனிப்பட்ட வழிகாட்டலில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


ஊழியர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் என்பனவும்  ஊழியர்களுக்கு இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.


சுற்றுச்சூழலையும் மக்கள் நலனையும் காக்கும் தூண்களாக விளங்கும் சுகாதார ஊழியர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தும் இந்த உன்னத முயற்சியை ஏற்பாடு செய்த தவிசாளரை ஊர் மக்களும் நலன் விரும்பிகளும் பாராட்டி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال