JobVibe.lk - Sri Lanka Job Portal

சிலாபம் மாதம்பை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில், சுற்றாடல் தின நிகழ்வுகள்.

எம்.யூ.எம்.சனூன்

2026 உலக சுற்றாடலை தினத்தை முன்னிட்டு சிலாபம் மாதம்பை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில், பாடசாலை அதிபர் எஸ்.எல்.அன்வர் தலைமையில் 05ம் திகதி முதல் ஒரு வாரத்திற்கான பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. 


இதில் முதல் கட்டமாக சுற்றாடல் தினம் தொடர்பான விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


ஆரம்பப் பிரிவு தரம் 1, 2, 3 மாணவர்கள் "சுற்றாடலைப் பாதுகாப்போம்" எனும் தொணிப்பொருளில் சுலோகங்களை ஏந்தியவாறு நகர் வலம் வந்ததுடன் தரம் 4, 5 மாணவர்கள் மற்றும் தரம் 10,11 மாணவர்கள் "கண்டல் தாவரங்களை பாதுகாப்பதன் தேவை" பற்றிய தெளிவைப் பெற பம்பளை கண்டல் தாவரங்கள் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர். 


தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் சிரமதானம், மரம் நடுகை, சுற்றாடல் எழுத்தாக்க நிகழ்ச்சிகள், கண்காட்சி மற்றும் மாணவர் மன்ற நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال