Breaking News

ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் நிர்வாக சபைக் கூட்டத்தின் தீர்மானங்கள்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் நிர்வாக சபைக் கூட்டம்   கட்சியின் செயலாளர் திரு. இர்பான் முஹிதீன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (2026 ஜூன் 2) கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் நிர்வாக சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கலந்துகொண்டு கட்சியின் தற்போதைய செயற்பாடுகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர்.


மேலும், மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வு முன்மொழிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக கிழக்கு மாகாண மக்களின் தேவைகள், உள்ளூராட்சி மட்டத்தில் காணப்படும் சவால்கள் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.


கட்சியின் அமைப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துதல், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல், மற்றும் நாட்டின் அனைத்து சமூகங்களுடனும் இணக்கப்பாட்டுடனான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுதல் என்பன தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.


மக்களின் உரிமைகள், சமத்துவம், நல்லாட்சி மற்றும் சமூக நீதியை நிலைநாட்டும் நோக்கில் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்படும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.




No comments