புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் இலங்கை பத்திரிகைப் பேரவையினால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை ஒன்று புத்தளம் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் புத்தளம் மாவட்ட செயலாளர் வை இந்திக மஞ்சுள சில்வாவின் தலைமையில் புதன்கிழமை (03) இடம்பெற்றது
இன்றைய கால கட்டத்தில் ஊடகவியலாளர்கள் சட்ட ரீதியாக எதிர் நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வு என்பன தொடர்பாகவும் பத்திரிகை பேரவை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் பிரதேச ஊடகவியலாளர்களின் கௌரவம் அதனை எவ்வாறு பாதுகாப்பது ஊடகவியலின் நவீன தொழில்நுட்பங்களுடன் எவ்வாறு முன்னேற்ற பாதையில் தமது ஊடக சேவைகளை பொது மக்களுக்கு வழங்குவது என்பது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது
இப் பயிற்சி பட்டறையில் இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவர் பீ.என்.ஆர். விஜயபண்டார, முன்னாள் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் அங்கத்தவரும் சட்டத்தரணியுமான ஜகத் லியாணாராச்சி, சிரேஷ்ட ஊடகவியலாளர் சிசிர யாப்பா, இலங்கை பத்திரிகை பேரவையின் உதவி ஆணையாளர் சுரோஷன இரங்க, இலங்கை பத்திரிகை பேரவையின் ஆணையாளர் நிரோஷன தம்பவிட்ட ஆகியோருடன் புத்தளம் மாவட்ட செயலகத்தின் ஊடக இணைப்பாளர் இந்துனி மற்றும் புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.








No comments