JobVibe.lk - Sri Lanka Job Portal

சென்னையில் நடைபெற்ற ‘திராவிட இயக்கத்தின் புத்தெழுச்சி நாள்’ நிகழ்வில் தூய தேசத்திற்கான கட்சி பங்கேற்பு.

எம்.யூ.எம்.சனூன்

முத்தமிழறிஞர் எம்.கருணாநிதி அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ‘திராவிட இயக்கத்தின் புத்தெழுச்சி நாள்’ நிகழ்வில், தூய தேசத்திற்கான கட்சியின் உறுப்பினரும், புத்தளம் மாநகர சபை உறுப்பினருமான ரிழ்வான் முகம்மது கலந்து கொண்டார்.


இந்த நிகழ்வில் எம்.கே.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஆர்.ப்ரியா உள்ளிட்ட பல அரசியல் மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.


இந்திய அரசியல் வரலாற்றில் திராவிட இயக்கம் சமூக நீதி, கல்வி விரிவாக்கம், மொழி உரிமைகள் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய இயக்கமாகக் கருதப்படுகிறது. 


முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது அரசியல் வாழ்வின் மூலம் தமிழ் மொழி வளர்ச்சி, கல்வி வாய்ப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பல்வேறு பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.


தூய தேசத்திற்கான கட்சி அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக்கழகத்திற்கு தனது ஆதரவை அறிவித்துள்ள போதிலும், ரிழ்வான் முகம்மது அவர்களின் இந்த பங்கேற்பு அரசியல் மரியாதை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வெவ்வேறு அரசியல் கருத்துக்களை மதித்து, மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் நல்லுறவை பேணுவது ஜனநாயக அரசியலின் ஒரு முக்கிய அம்சமாகும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال