JobVibe.lk - Sri Lanka Job Portal

ஏத்தாளை பாடசாலை வரலாற்றில் முதற் தடவையாக, அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டியில் முதலிடம். மாணவி ஹுஸ்னா சாதிப்பு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கல்பிட்டி ஏத்தாளை ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தரம் 07ல் கல்வி கற்கும் எம்.எஸ்.எப். ஹுஸ்னா என்ற மாணவி நடைபெற்று முடிந்த அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டியில் வலய மட்டத்தில் பிரிவு -1 கட்டுரை வரைதல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று  பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். 


இவர் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக வலய மட்டத்தில் முதலாம் இடத்திற்கு தெரிவான மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் சிறப்பாக செயல்பட்டு தமக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவிக்கும், அவரை பயிற்றுவித்த ஆசிரியை வீ.எப்.ரிஸ்லாவுக்கும் பாடசாலை சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ள  அதிபர் எம்.ஐ.எம். இம்ரான்கான், இம்மாணவி மாகாண மட்டத்திலும் முதலிடம் பெற பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال