Breaking News

தலவத்துகொடையில் உணவத்தில் ஏற்பட்ட தீயினால் மூவர் உயிரிழப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

தலவத்துகொட சந்திக்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றில்  செவ்வாய்க்கிழமை, (09) அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி, பலத்த காயமடைந்திருந்த மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


  இந்த உணவகத்தில் திடீரெனத் தீ பரவியதை அடுத்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோட்டை மாநகர சபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.


இந்த விபத்தின் போது கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான மூன்று பேரும், உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் மூவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாகக் காவல்துறையினர் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்


சமையல் எரிவாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பாக தலங்கம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments